"கும்பகர்ணன் விட்ட கடைசிக்குசுவெனக் கொள் என்னை"

Wednesday, May 12, 2010


அன்றலர்ந்த ஆச்சா மரம் போல வீழ்ந்தானோ அவன்!
போச்சா, உள்ளிழு மூச்சு விடுவெளிமுன்னே
வீச்சாய்ச் செல்களம் மாறி
ஒளிந்திருந்தம்பெய்வான் பாதம்
இன்றே போய் நன்றே புக்கிப்
புலம் தொழுது வாழ் புல்லர்.

மல்லாக்காய் வீழ்ந்து மாண்டான் மாநிலவேந்தன்
இராவணன் இல்லாத்தலையையும் முள்கோலிக் கொய்து
தம்படி செப்படிவித்தை செல்லுபடியாக்கும்
பொல்லாவிபீஷணர் சுருக்குவால்களிலே
வல்லான் என்னான் கல்லாலனைக் கொல்
தர்மம் எல்லாம் நியாயமென்றோதிப் பறக்கிறது
இரவினும் பகலிலும் எல்லாப்பொழுதிலும்
கிழியக் கட்டிய இரவற்பீதாம்பரம்.

பெருகு தாரை உருகிச் சபித்த இராமன்கள்ளேறு
ஆண்குறிதன் அடிமுடி சவரம் செய்யப் பெருகுவது,
மாரீசத்தூதுவேடத்தே வெஞ்சினமாய்
தம்போக்குவாழாளையும் அழுகுழவியையும்
எல்லாம் சமமென்று தீயேற்றிக் கழி
இலங்கா(த்)தகனத்து களிகொள் மாருதி வாலல்ல;
எதிர்வீடிரவு விபீஷணர்தம் சொற்சிற்பத்துச்சிப்பம்.
இழவெடுவில்லத்தே இருப்புக்காய்
ஏற்றுக்கொண்ட இராமகீதங்களை,
கால் சுற்றிவளைக்கடி க்ருதிகளை
கருணை கொள் கசட்டுநிதிதரு
வல்லோர் எல்லாம் நல்லோரென்று
எனக்குப் புகட்டமுன்னே,
இதைச்
சொல்வேன் கேளும்:

"வாய்க்கால் சிவந்த முள்ளுக்களமேனும்
கால்வாய் கடந்திழியும் பனிநிலப்புலமேனும்
பிறழாச்சொல்நீதி பொருந்தாச் செய்கடமை
கொல்லப்புல்தின்ற கும்பகர்ணன் விட்ட
கடைசிக்குசுவெனக் கொள்ல்க என்னை.

அவப்பொழுதே
மணத்திருப்பேன்
நும்மூக்கில்"

மே/12/2010-புதன்.

8 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சித்தார்த்த 'சே' குவேரா said...

சோதனை

சென்ஷி said...

// சித்தார்த்த 'சே' க்வாடா said...

சோதனை//

படிக்குறவங்களுக்கா சார்?

சுகுணாதிவாகர் said...

தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் பெயரிலி!

தமிழ்நதி said...

அவரிடம் கற்ற தமிழ் இனி அவரைப் போற்றாது:) எல்லாம் இப்படித்தான் போயொழியுங் காலமோ இது...

தமிழ்நதி said...

நீங்களா....? எனக்குக் கூடத் தோன்றியது:)

சித்தார்த்த 'சே' குவேரா said...

நன்றி சிவக்குமார்

தமிழ்நதி

ஆயக் கற்றதினால் பயன் என்ன? கொல்!

Anonymous said...

உங்களைக் கவிதையெழுத வைத்திருக்கிறாரே! அதற்காவது நன்றி சொல்வேன்.

-வசந்தன்